மக்கள் பணத்தில் பேனா நினைவு சின்னம்!! அனுமதி வழங்கிய மத்திய அரசு.. அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்!!
திமுக ஆட்சி அமைத்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் ஆளுமையை போற்றும் விதத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அவர் உபயோகித்த பேனாவின் மாதிரி ஒன்றை மெரினா கடற்கரையில் அமைக்க இருப்பதாக கூறினர். ஆனால் திமுகவின் இந்த அறிவிப்பிற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது.80 கோடி ரூபாய் செலவில் இவ்வாறு நடு கடலில் அமைப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, வீண் செலவு என பலரும் கூறினர். இது குறித்து மக்கள் மற்றும் இதர கட்சிகளிடம் கேட்ட பொழுது பெருமளவு எதிர்ப்பை தான் தெரிவித்தனர்.
அந்த வகையில் சீமான் பேனா நினைவுச் சின்னத்தை வைத்தால் நான் அதனை உடைப்பேன் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.இந்த பேனா நினைவுச் சின்னம் வைக்க வேண்டும் என்றால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது பல்வேறு அனுமதி வழங்க வேண்டும். அந்த வகையில் முதலாவதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து மத்திய அரசு பொதுப்பணித்துறையிடம் தமிழக அரசு சமர்ப்பித்த நிலையில் அதற்கு ஒப்புதலும் கிடைத்துவிட்டது.
மேற்கொண்டு கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஐ என் எஸ் கடற்ப்படை தளத்தில் சான்றுகளும் பெற வேண்டி இருந்தது. மேற்கொண்டு அவர்கள் கூறிய 15 நிபந்தனைகளையும் வழங்கியது. இந்த 15 நிபந்தனைகளை அடுத்து தற்பொழுது கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆனது பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு அனுமதி வழங்கி விட்டது. பேனா சின்னம் அமைப்பதற்கு ஒன்றன்பின் ஒன்றாக ஒப்புதல் அனுமதி பெற்ற நிலையில் தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் பாஜகவிற்கும் எதிர்க்கட்சிக்கும் இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மக்கள் பணத்தில் 80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் தேவையா என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் எவ்வாறு இதற்கு அனுமதி அளித்தனர் என சந்தேகம் எழுந்துள்ளது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக பல யுக்திகளை எடுத்து வரும் நிலையில், வாக்குகளை பெற இவ்வாறு அனுமதி அளித்து விட்டனரா என்றும் பேசி வருகின்றனர்.