விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

0
136
Government fertility treatment center coming soon!! Foundation Minister M. Subramanian!!

 விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை எழும்பூரில் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு கருத்தரித்தல் மையம் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகரின் எழும்பூரில் ரூ.5.89 கோடி செலவில் தாய் சேய் நல மருத்துவமனை அமைக்கபட இருத்த நிலையில் அதற்கு அடிக்கல் நாட்டினார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்த மையம் காத்திருப்பு அறை ,உணவு கூடங்கள் போன்ற பல வசதிகளுடன் அமைக்க பட உள்ளது. மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்ற புதன்கிழமை அன்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ,ஆணையர் ஜெ,ராதாகிருஷ்ணன் , மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ,சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஏ.தேரணிராஜன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் மட்டும் தாய் சேய் நல மருத்துவமனை  மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை என்ற இரண்டு மருத்தவமனைகளிலும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

சிகிச்சைக்காக வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட பின்பு அவர்களின் உறவினர்கள் தங்க இடமின்றி ,நல்ல உணவுகூடமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டே  முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் இந்த கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட உள்ளது.இந்த மையங்கள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.