100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
முன்னாள் முதலமைச்சர் கருநாணநிதி பிறந்த நாளையொட்டி தமிகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படுகின்றது.
முன்னால் முதலமைச்சரான கருணாநிதி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் என்ற திட்டத்தின் பெயரில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது வருகின்ற 24 ம் தேதி சென்னையில் மாபெரும் கருத்தரங்க முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் 93 லட்சம் பேர் தங்களது பெயரை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.அதில் வெறும் 63 லட்சம் பேர் மட்டும் பணிக்கு வருவதாகவும் மீதம் உள்ள லட்சம் பேர் மட்டும் பணிக்கு வருவதாகவும் மீதம் உள்ள 30 லட்சம் பேர் வருவதில்லை என்றும் கூறினார்.
இந்த 2021 ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை தொடங்கிய பொழுது வெறும் 24 லட்சம் பேர்தான் இருந்தனர்.அதன் பிறகு இதனை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்திருபதாகவும் அவர் கூறினார்.
இவை அனைத்தும் தேர்தலை மையப்படுத்தி செய்ய வில்லை என்றும் கலைஞர் விட்டு சென்ற இடத்தை இப்பொழுது நிரப்புவதற்கான பணிகள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி கலைஞர் அவர்கள் மக்களுக்காக தொடங்கிய இந்த திட்டத்தை எல்லாம் இனி சிறப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செய்யப்படும் என்றார்.