100 சதவீதம் நேர்மையும் உழைப்பும் இருக்கும்! கம்பீர் புகழ்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! 

0
140
100 percent honesty and hard work! Former fast bowler praised by Gambhir!
100 சதவீதம் நேர்மையும் உழைப்பும் இருக்கும்!! கம்பீர் புகழ்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அவர்களை குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளார்.
இராகுல் டிராவிட் அவர்கள் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அவர்கள் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவருடைய தலைமையில் தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர்  கவுதம் கம்பீர் அவர்கள் குறித்து ஜோகிந்தர் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி இறுதிப் போட்டியில் கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா ஆவார். அதாவது அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
அப்பொழுது பாகிஸ்தான் அணியிடம் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரை சிறப்பாக வீசி பாகிஸ்தான் அணியின் மீதமுள்ள ஒரு விக்கெட்டை கைப்பற்றி ஜோகிந்தர் சர்மா இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஜோகிந்தர் சர்மா தற்பொழுது கவுதம் கம்பீர் குறித்து பேசியுள்ளார்.
கவுதம் கம்பீர் குறித்து ஜோகிந்தர் சர்மா அவர்கள் “கவுதம் கம்பீர் அவர்கள் தற்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவர்தான் இந்திய அணியை கட்டுப்பாட்டுடன் நடத்தி வருகின்றார். ஆனால் கவுதம் கம்பீர் அவர்களால் நீண்ட நாட்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க முடியாது என்று எனக்கு தோன்றுகின்றது.
ஏன் அவரால் நீண்ட நாட்கள் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறுகின்றேன் என்றால் கவுதம் கம்பீர் அவர்கள் எல்லா விஷயங்களிலும் எடுக்கும் முடிவுகள் அனைத்து வீரர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நான் பொதுவாகத் தான் கூறினேன். விராட் கோஹ்லியை மட்டுமே குறித்து கூறவில்லை. ஏனென்றால் பல சமயங்களில் கவுதம் கம்பீர் அவர்கள் எடுக்கும் முடிவில் வீரர்களுக்கு உடன்பாடு இருக்காது. கவுதம் கம்பீர் அவர்கள் யார் எவர் என்று பார்க்காமல் அனைத்து வீரர்களையும் சமமாகத்தான் பார்ப்பார். அது மட்டுமில்லாமல் யாராக இருந்தாலும் சரி முகத்திற்கு முன் கருத்தை செல்லக் கூடியவர்தான் கவுதம் கம்பீர்.
என்னதான் கரடு முரடாக இருந்தாலும் கவுதம் கம்பீர் அவர்களின் செயல்பாடுகளில் 100 சதவீதம் உண்மையும், உழைப்பும், நேர்மையும் இருக்கும். இந்தியா வெற்றி பெறவேண்டும் என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் கவுதம் கம்பீர்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
கவுதம் கம்பீர் அவர்கள் 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 75 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜோகிந்தர் சர்மா இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா தற்பொழுது ஹரியானா மாநிலத்தின் காவல் துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இவருடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.