5 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!
அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த களவரமானது அருகில் உள்ள குருகிராமுக்கும் பரவியது. இதனால் அங்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.
இந்த வன்முறையின் காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவை மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த மாவட்டங்கள் அனைத்திலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதாவது நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் போன்ற மாவட்டங்களிலும், குருகிராமின் துணை பிரிவுகளிலும் வருகின்ற ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வரை இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.