Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

20 over cricket match between India and Bangladesh Instructions-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

20 over cricket match between India and Bangladesh Instructions-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி வங்காளதேச அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு காற்றில் மாசு அதிகரித்து ஒரே புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் சில வீரர்களும், தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ, சுழற்பந்து வீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி போன்றோரும் பயிற்சியின் போது சுவாச கவசம் அணிந்து இருந்தனர்.

இதன்படி இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா (அருண் ஜெட்லி ஸ்டேடியம்)  ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா இந்திய அணியை வழி நடத்துகிறார்.  

இதனிடையே டெல்லியில் காற்றின் மாசு அபாயகரமான அளவை தாண்டி விட்டது. அங்கு எங்கு, பார்த்தாலும் புகைமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் தான் வங்காளதேச அணியில் பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இப்போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்க வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. மேலும்  இன்று நடைபெறும்  போட்டியை காண வரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version