இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

0
155
கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு போட்டியும் கடந்த மூன்று மாதமாக நடைபெறவில்லை. இதனால் ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் தள்ளிபோனது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.  அங்கு கொரோனா அதிகரித்து வருவதால் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.