T-20 உலக கோப்பை.. இந்திய அணியின் புதிய உடையை அறிமுக செய்த பிசிசிஐ.!!

0
209

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

துபாய் சர்வதேச மைதானம், சார்ஜா மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய இந்திய அணியை பிசிசிஐ செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.

தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரை அடுத்து இன்னும் 4 நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின்ம் பேர் கொண்ட விவரத்தையும் மற்றும் டீம் ஜெர்ஸியையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெஸ்ஸியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி-20 உலகக்கோப்பைக்கு தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன்,ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்கிரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார்,

பேக்-அப் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சஹர்