கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக மாறியுள்ளார் ரிங்கு சிங். அவரது கனவு தன் பெற்றோர்களுக்கென சொந்த வீடு வாங்குவது அவரின் 27 வருட கனவை நினைவாக்கியுளார் தனது சொந்த ஊரில் பங்களா ஒன்றை வாங்கி குடிபெயர்ந்தார்.
2023 ஆண்டு ரிங்கு சிங்கிற்கு சிறந்த ஐ பி எல் தொடராக அமைந்தது என்றே கூறலாம். அந்த ஆண்டுதான் ரிங்கு சிங் என்றால் யார் என்பதை அறிமுகம் செய்தது KKR அணி. அந்த ஆண்டு தொடரில் அனைத்து போட்டிகளிலும் எந்த வரிசையில் இறக்கப்பட்டாலும் பந்துகளை சிக்ஸர் பறக்கவிட்டார்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 5 ரன்களுக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளையும் சிக்ஸர் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.அதற்கு பின் இந்திய அணியின் டி 20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான KKR அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் முதல் ஆளாக ரிங்கு சிங் ரூ. 13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். அடுத்து KKR அணியின் கேப்டன் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் சொந்த ஊரான அலிகாரில் பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கி உடனடியாக தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இது குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.