இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?

0
152

இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெல்ல போவது யார்?

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் போராடி வருகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ் மற்றும் சாசாய் முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வீசிய பந்தில் குர்பாஸ் 15 ரன்கள் மற்றும் சாசாய் 26 ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.அடுத்து களமிறங்கிய கரீம் ஜனத் 26 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹோல்டர் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

பின்பு களமிறங்கிய பேட்ஸ்மேன்களான ஆஸ்கர்ஆப்கான், இப்ராகிம் ஜட்ரான்,நபி ஆகியோர் பெரிதாக ரன் எதுவும் எடுக்காமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜிபுல்லாஹ் ஐட்ரான்(20) மற்றும் குலாபுதின் நைப்(24) ஆகியோர் நிதானமாக தங்களது அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.மேற்கு இந்திய தீவு தரப்பில் அதிகபட்சமாக கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஹால்டேர் மற்றும் கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.முதல் போட்டியில் தோல்வியை கண்ட ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பௌலிங் செய்து வருகிறது.