இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருந்தாலும் சொந்த மண்ணில் விளையாடும் வீரர்களான ஆஸ்திரேலியா பவுலர்களை எதிர்கொள்வது கடினம் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன்.
நவம்பர் 22 ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்து போட்டியில் தோல்வி காரணமாக இந்த போட்டியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
இந்தியா-நியூசிலாந்து போட்டியில் ரோஹித் மற்றும் கோலி இருவரும் இணைத்து 6 இன்னிங்ஸிலும் சேர்த்து 100 ரன்கள் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா மைதானம் முற்றிலும் வேறுபட்டது அதில் எப்படி விளயடபோகிரார்கள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் விராட் மற்றும் ரோஹித் இருவரும் அதிக அளவிலான போட்டிகள் ஆஸ்திரேலியா மைதானத்தில் விளையாடியுள்ளனர் அவர்களுக்கு அனுபவம் அதிகம் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
எனினும் ஆஸ்திரேலியா அணி சிறந்த பந்துவீச்சாளர்களான ஹேசில்வுட் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய பவுலர்கள் சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீச கூடியவர்கள் அவர்கள் ரோஹித் மற்றும் விராட் இருவரின் விக்கெட்டை வேட்டையாட காத்திருக்கிறார்கள் அதற்கென சிறந்த பேட்டிங் டெக்னிக்கை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.