Cricket: இரண்டாவது டெஸ்ட் தொடரில் மூன்று வீரர்களை மாற்றம் செய்துள்ள இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர் 16-20 இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் மட்டும் 5 வீரர்கள் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆகினர். அதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ப்ராஸ் கான் சதம் விளாசினார் ஆனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்தது.
இரண்டாவது போட்டி 24 ம் தேதி புனேவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் இந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நேரடியாக இந்த டெஸ்ட் தொடரின் பட்டியலில் இணைக்க பட்டார்.
இதனால் அடுத்த இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ப்ளேயிங் லெவனில் விளையாடுவர், மேலும் கழுத்து வலி காரணமாக முதல் போட்டியில் சுப்மன் கில் இடம்பெறவில்லை. கே எல் ராகுல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார் அதனால் அவருக்கு பதிலாக 3 வது இடத்தில் சுப்மன் கில் களமிறங்குவார். முகமது சிராஜ் க்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.