கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

0
95
3 Crore fraud in co-operative bank!! Police action!!

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் வெள்ளரிவெளி. இந்த கிராமத்தில் தமிழக அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த சங்கத்தில் 55 வயதுடைய மோகன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

அந்த சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால இட்டு வாய்ப்பு முதலிய பரிவர்த்தனைகளில் மொத்தமாக மூன்று கோடியே பதினைந்து லட்சம் ரூபாயை இவர் எடுத்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் விசாரனை நடத்தினர். அதில் மோகனுடன் இணைந்து இன்னும் சில பேர் இதில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

எனவே, செயலாளர் மோகன், மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கூட்டுறவு சங்கம் பதவி நீக்கம் செய்தது.

இது தொடர்பான விசாரணை சேலம் மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர்கள் நான்கு பேரையும் மோசடி வழக்கில் கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர்.

இதில் மூன்று பேரை கைது செய்துவிட்டு, அடுத்து நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமாரை கைது செய்ய அவர் வீட்டுக்கு செல்லும் போது அவர் வீட்டில் இல்லை. விசாரணையில் அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

எனவே, மீதமுள்ள மூவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ரவிக்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.