Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பயிலரங்க வளாகத்தில் வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார்.

கொடியேற்றத்திற்குப்பின் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி

ஆளும் கட்சிகளின் ஊழல்கள்,ஆக்ட்டிங்,மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் ஆகியவற்றை கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ‘ஊமை ஜனங்கள்’ என்று சாடி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒருதடவை கூட ஆட்சியை பிடிக்கமுடியவில்லை என்று வருத்தத்துடன் கூறிய ராமதாஸ் அவர்கள் ஊழலுக்கு தான் காலம் தங்களை போல் ஊழலுக்கு எதிராக,மதுவிற்கு எதிராக பேசுவோர்களுக்கு காலம் இல்லை என்றார்.தமிழக மக்களுக்கு பட்டியலிட்டு ஆளும் கட்சிகள் செய்த மற்றும் செய்கின்ற குற்றங்களை எடுத்துரைத்து வரும் தன்னால் ஒரு 10 நாட்கள் கூட தமிழகத்தில் ‘ஆக்ட்டிங்’ முதல்வராக வரமுடியவில்லையே என்று மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது ; ‘முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்படும்’ கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.மேலும் தமிழகத்தில் மது விலக்கு (மது இல்ல தமிழகம்),பெண்களின் முன்னேற்றம் ,மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கெதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வடதமிழகத்தில் தொண்டர்கள் செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கியில் பலம் அதிகம்.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.மக்கள் நல்ல முற்போக்கு சிந்தனையுடன் இருத்தல் மற்றும் ஆளும் அரசு செய்கின்ற செயல்களை பார்த்து ஊமையாக இருக்காமல் தங்களது கருத்துகளை சொல்லும் நிலை ஏற்பட்டால் தான் தமிழகம் வளர்ச்சி பாதையை எட்டும் என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.

அப்பொழுது ராமதாஸ் அவர்களுடன் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Exit mobile version