இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் நாளை 4 வது போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நாளை பாக்சிங் டே போட்டியாக தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.
இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தும் மூன்றாவது போட்டியில் சமனில் முடிந்துள்ளது. எனவே இனி வரும் இரு போட்டிகளில் வெல்ல தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணியில் விளையாடவுள்ள தகவும் மேலும் தொடக்க வீரராக ரோகித் சர்மாவும் 3 வது வரிசையில் கே எல் ராகுல் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கில் எந்த வரிசையில் களமிறங்க போகிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த மாற்றங்கள் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தருமா? என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.