ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!

0
108
5 crore worth of watches confiscated from Hardik Pandya! Shocked customs officials!

ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!

ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தமாதம் 17 ம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணியும் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்திய அணி வெற்றி வாகை சூடவில்லை. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஷாட் பிட்ச் பந்து ஒன்று அவரது தோள்பட்டையில் பலமாக தாக்கியது. அதன் காரணமாக அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவருக்கு  ஏற்பட்ட வலியின் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க தடை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. எனவே துபாயிலிருந்து பாண்டியா நாடு திரும்பினார்.

அப்போது அவரிடம் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் பணம் செலுத்தியதற்கான ரசீது எதுவுமே இன்றி இரண்டு கை கடிகாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் அதன் மதிப்பு மட்டும் சுமார் 5 கோடி வரை இருக்கும் என்றும் இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை ஹார்திக் பாண்டியா தரப்பில் இருந்து மறுத்து விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும்  தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.நான் செலுத்த வேண்டிய தொகையை  செலுத்த தயாராக இருந்தேன்.நான் எவ்வளவு தொகை  செலுத்த வேண்டுமோ அதற்கான மதிப்பீட்டை சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொள்கின்றனர் .அதை நான் செலுத்துவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளேன்.

https://twitter.com/hardikpandya7/status/1460452026710564866/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460452026710564866%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FSports%2FCricket%2F2021%2F11%2F16102745%2FHardik-Pandya-clarifies-he-voluntarily-went-to-customs.vpf