இந்திய அணியில் முக்கிய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று நடைபெற்று வந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் முடிவுக்கு பின் தனது ஓய்வை அறிவித்தார். இவ்வாறு போட்டியின் நடுவே இவர் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த 2024 ம் ஆண்டில் மட்டும் அஸ்வின் உடன் சேர்த்து 6 முக்கிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டி ஷிகர் தவான் நீண்ட நாட்களாக இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் அவர் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஐ பி எல் ல் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 2024 டி20 கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் அவரும் இதற்கு மேல் வாய்ப்புகள் கிடைக்காது என தெரிந்து அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வை அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2024 டி 20 உலக கோப்பை தொடரை வென்ற பின் இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மூவரும் ஓய்வை அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்களால் மறக்க முடியாத வருடமாக 2024 ஆம் ஆண்டு மாறியுள்ளது.தினேஷ் கார்த்திக்,அஸ்வின், ஷிகர் தவான் ஆகியோர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளனர். விராட் கோலி, ரோஹித், ஜடேஜா டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வை அறிவித்துள்ளனர்.