தமிழகத்திற்கு 60 ரயில் நிலையங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!
ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீனமயமாக்கும் அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தை 2023 ஆம் ஆண்டில் ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டம் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ரயிலில் புதிய வசதிகள் அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ரயில் நிலையங்களில் அத்தியாவசிய வசதிகள் இருப்பதைப் பொறுத்து இங்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் மேலும் சில வசதிகளான தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள் மற்றும் ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறைகள் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு கோரி உள்ளது.
தெற்கு ரயில்வே பகுதியில் உள்ள 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். அதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூபாய் 934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆறு பகுதிகளில் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனுடன் தமிழகத்தில் சில பகுதிகளான சென்னை எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நாகர்கோவில், கூடுவாஞ்சேரி, கன்னியகுமாரி, தஞ்சை, திருச்செந்தூர், ஈரோடு, கரூர், தென்காசி, அரக்கோணம் ஆகியவற்றின் ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.