Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!

73 km double track!! Railway department's super announcement!!

73 km double track!! Railway department's super announcement!!

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!

மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது கரூர் மாவட்டத்திற்கு கூடுதல் ரயில் சேவை தேவைபடுகின்றது என்பதால் 73 கிலோ மீட்டருக்கு இரட்டிப்பு ரயில் பாதையை அமைக்கப்பட உள்ளது.

தினசரி நாள் ஒன்றிற்கு மட்டும் சுமார் 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் திண்டுக்கல் ஜங்சன் வழியாக செல்கின்றது.மேலும் திண்டுக்கலில் இருந்து கரூர்க்கு நாள் ஒன்றிற்கு  8 ரயில்கள் இயக்கப்படுகின்றது.

இவை இரண்டிற்கும் ஒரே வழிப்பாதை இருப்பதால் கிராஸ் செயிவதற்காக வழியில் நிறுத்தப்பட்டு  பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுத்துகின்றது.

அந்த வகையில்  ரயில்வே துறை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டால் இந்த சிரமத்தை குறைக்க முடியும் என்றும் இதனால் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version