Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார்.

இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை.

இதனையடுத்து எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் போரகெடி காவல் துறைக்கு வந்து காவல் நிலையத்தை சுற்றி முற்றுகை இட்டார். இது போன்ற சம்பவம் இதுவரை இங்கு எராளமானாதாக நடந்துள்ளதாகவும், நடைபயிற்சி செய்ய வரும் சிறுமிகளையும், பெண்களையும் இந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கூறி உள்ளார்.

ஒரு பெண்ணை எட்டு பேர் இவ்வாறு சீரழித்தது குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் அப்பொழுது தான் காவல் நிலையத்தை விட்டு செல்வேன் என்று எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, போலீசார் குற்றவாளிகளை பிடித்து கைது செய்வார்களா என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version