சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

0
101
#image_title

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிக்சர் அடித்தால் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும் 10 ரன்களும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்பொழுது சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அவர்கள் இருக்கின்றார். இந்திய அணி இவருடைய தலைமையில் இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. தற்பொழுது இந்திய அணி இவருடயை தலைமையில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களிடம் “நீங்கள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்க வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் “சிக்சர் அடித்தால் 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பேட்ஸ்மேன் 90 மீட்டருக்கு மேல் 100 மீட்டருக்குள் சிக்சர் அடித்தால் 8 ரன்கள் வழங்க வேண்டும் அதே போல 100 மீட்டருக்கு மேல் சிக்சர் அடுக்கும் பொழுது அதற்கு 10 ரன்கள் கொடுக்கலாம்” என்று கூறினார்.

கேட்கப்பட்ட கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை கூறிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் ஆசை அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா கூறிய இந்த புதிய விதிமுறைக்கு அனைவரும் வரவேற்பளித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யும் ரோஹித் சர்மா பரிந்துரைத்த விதிமுறையை கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.