Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடங்கியது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம்!

ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ஆம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. ஏலத்திற்கு 792 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் எட்டு தமிழக வீரர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பத்து தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். அதில் வரும் சக்கரவர்த்தி எம் சித்தார்த்தை கொல்கத்தா அணி தேர்வு செய்து இருக்கின்றது. அதேபோல சாய் கிஷோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்து இருக்கிறது.

சாருக்கான், ஹரி நிஷாந்த், பெரியசாமி, மணிகண்டன், பாபா அபராஜித் முகமது அபினவ், போன்ற ஏழு தமிழர்களை இதுவரையில் தேர்வு செய்யாத காரணத்தால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் தற்சமயம் சையத் முஷ்டாக் அலி கோப்பையை டி20 ஆட்டத்தின் இறுதி போட்டியில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை தோற்கடித்து பெற்றது இருந்தாலும் ஐபிஎல் ஏலத்தின் பொழுது ஷாருக்கான் எம் சித்தார்த் ஹரி நிஷாந்த் போன்ற பல தமிழக வீரர்கள் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர்கள் 11 பேர் இடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் முரளி விஜயும் என் சித்தார்த்தும் அவரவர் சார்ந்த அணிகளால் தக்க வைக்கப்படவில்லை. இருந்தாலும் எம் சித்தார்த் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றிருக்கிறார் .ஆனாலும் ஏலம் பட்டியலில் முரளி விஜய் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version