இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய யோகங்கள்..!!

Photo of author

By Janani

இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய யோகங்கள்..!!

Janani

இந்த ஆண்டு 2025 சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய அனைத்தும் நடைபெறும். இதில் சனிப்பெயர்ச்சியானது கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். அவற்றுள் சாதகமான பலன்கள் அமையக்கூடிய ராசிகளில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்க உள்ள யோகங்கள் குறித்து தற்போது காண்போம்.

சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் முதல் பகுதியில் 10 ஆம் இடத்தில் 5 கிரகம் கூடியிருக்கும் தன்மை இருக்கிறது. மூன்றாம் அதிபதி சூரியன் 11 ஆம் இடத்தில் உச்சமாகி இருக்கிறார். 10 ஆம் இடம் என்பது நல்ல மாற்றமாகும். 9 இல் இருக்கும் சனி பத்தில் வருவது வலிமையைத் தரும். கடந்த காலத்தில் அப்பா சம்பந்தப்பட்ட விஷயங்களில் நடக்காதது எல்லாம் இந்த மாதத்தில் நல்லவையாக நடக்கும்.

தந்தையின் சொத்துகளை அனுபவிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சொத்துகளில் இருந்த பிரச்சனைகள், தடைகள் நீங்கும். தந்தை, அவரது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.11 ஆம் இடத்தில் சூரியன் உச்சமாவது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு, அரசு உதவியை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.

நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்த வாய்ப்புகள் நல்ல மாற்றங்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் யோக மாதமாக இருக்கும்.12 ஆம் இடத்தில் இருக்கும் குரு உங்கள் ராசியில் மே மாதம் அமருவதால் வாழ்க்கையில் ஒரு ஒளி உண்டாகும்.

சமுதாயத்தில் அந்தஸ்து, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும் உங்களுக்கு கிடைக்கும். காதல் நிறைவேறக் கூடிய அமைப்பு உண்டாகும். புதிய காதல் உண்டாகும். கணவன், மனைவிக்குள் பிரச்சனை தீரும்.

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சோதனைகள் எதுவும் இல்லாமல் சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
குறிப்பாக பெண்கள் கடந்த 5 ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பார்கள். இனி கணவரால், குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

நெருப்பு சார்ந்த துறை, மின்சாரத் துறை, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு, அந்த துறையில் தொடர்பு கொண்டவர்களுக்கு நல்ல பண வரவு உண்டாகும். முன்னேற்றம், வளர்ச்சியான காலகட்டமாக இருக்கும்.