வியாழக் கிழமையில் வரக்கூடிய சஷ்டி நாட்களில் முருகப் பெருமானை இப்படி வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் வேண்டிய அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்..!!

Photo of author

By Janani

வியாழக் கிழமையில் வரக்கூடிய சஷ்டி நாட்களில் முருகப் பெருமானை இப்படி வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் வேண்டிய அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்..!!

Janani

முருகப்பெருமானுக்கு உகந்த திதி என்றால் அது சஷ்டி திதி தான். பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் முதலில் சஷ்டி திதியை தான் தேர்வு செய்வார்கள். அதிலும் குறிப்பாக குழந்தை பாக்கியம், திருமண வரம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேற சஷ்டி திதி மிகவும் உகந்ததாகவே கருதப்படுகிறது. இதில் பலரும் தேய்பிறை சஷ்டியை தான் பயன்படுத்துவார்கள்.

வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி திதி அன்று முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால், நம் வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களும் உண்டாகும் என்று கூறலாம். அந்த வகையில் குபேர யோகத்துடன் வாழ்வதற்கு, குபேர சஷ்டி நாள் அன்று செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாகவே யார் ஒருவர் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டி திதி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

முருகப்பெருமானுக்கு உகந்த நெய்வேத்தியங்கள், மலர்கள், தீபங்கள் என்று பலவற்றையும் செய்து முருகப்பெருமானின் அருளை பெற்று அவர்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழியையும் பெறுவார்கள். அந்த வகையில் குபேர சஷ்டி திதி என்பது மிகவும் சிறந்த ஒரு நாளாகும்.

அதிலும் வியாழன் கிழமை அன்று குபேர சஷ்டி வந்தால் மிக மிக சிறப்பு. ஏனென்றால் வியாழன் கிழமை என்பது குபேர பகவானுக்கும், குரு பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழ்கிறது. முருகப்பெருமானே நமக்கு குருவாக வந்து அருள் பாலிப்பார் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதனால் வியாழக்கிழமை வரக்கூடிய சஷ்டி திதி என்பது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை உண்டாக்கும் என்று கூறலாம். மேலும் அன்றைய தினம் குபேர பகவானுக்கு உகந்த தினமாக கருதப்படுவதால், நாம் செய்யக்கூடிய முருக வழிபாடு நம்மையும் குபேர யோகத்துடன் வாழ வைக்கும்.

அன்றைய தினம் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இதற்கு நாம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். எந்த நேரத்தில் சஷ்டி திரிக்குரிய அபிஷேகம் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொண்டு, அந்த நேரத்திற்கு முருகன் ஆலயத்திற்கு சென்று அபிஷேகத்துக்கு உகந்த பொருட்களை வாங்கி தர வேண்டும்.

அதிலும் குறிப்பாக சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களை வாங்கித் தருவதன் மூலம் நமக்கு நல்ல செல்வ செழிப்பு உண்டாகும். இதோடு மட்டுமல்லாமல் முருகப்பெருமானுக்கு வெட்டிவேர் மாலையை வாங்கி தந்து வழிபாடு செய்தோம் என்றால், நமக்கு குபேரருக்கு நிகரான யோகம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்னும் பட்சத்தில், வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஆறு என்ற எண்ணிக்கையில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு வெட்டிவேரை வாங்கி நாமே நம்முடைய கைப்பட மாலையாக கட்டி, முருகப்பெருமானின் படத்திற்கு சாற்றி முருகப்பெருமானுக்குரிய கவசங்களில் ஏதாவது ஒன்றை பாராயணம் செய்து, முருகப்பெருமானை முழு மனதோடு வழிபாடு செய்ய முருகப்பெருமானின் அருளால் குபேர யோகம் உண்டாகும்.

இந்த முறையில் குபேர சஷ்டி நாள் அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, குபேர யோகம் கிடைப்பதோடு முருகனே குருவாக இருந்து வழிநடத்திச் செல்வார்.
முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. சஷ்டி திதி அன்று நாம் எதை நினைத்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்கிறோமோ, அது நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்றும், தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. எனவே வியாழக்கிழமை அன்று வரக்கூடிய சஷ்டி திதியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமான், குரு பகவான் மற்றும் குபேர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இப்படி இவர்கள் மூவரின் அருள் நமக்கு கிடைக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் முற்றிலும் தீரும்.