நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், வசதியான வாழ்க்கையை வாழவும் செல்வ வளம் என்பது மிகவும் அவசியம். குடும்பத்தில் பணவரவு என்பது இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஒரு சிறிய முன்னேற்றத்தை யாவது காண முடியும். வீட்டில் செல்வம் தங்க வேண்டும், செல்வமானது நிலைத்திருக்க வேண்டும் என்றால், அந்த குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சம் என்பது மிகவும் அவசியம்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பார்கள். ஆனால் மாத இறுதியில் ஒரு ரூபாய் கூட கையில் மிஞ்சாது. இதுபோன்ற சூழ்நிலை என்பது இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உள்ளது. இவ்வாறு சம்பாதிக்கும் பணம் செலவாகி கொண்டே இருக்கிறது, கையில் எந்த ஒரு பணமும் தங்குவதில்லை, இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கவலை கொள்பவர்களும் அதிகம் உள்ளனர்.
நமது வீட்டின் பூஜை அறையில் பலவிதமான கடவுளின் படங்களை வைத்து வழிபட்டு வருவோம் அதனை தவிர்த்து வீட்டின் ஹால் மற்றும் மற்ற அறைகளிலும் ஏதேனும் ஒரு அழகு சார்ந்த படங்களையும் ஒட்டி வைத்திருப்போம். இவற்றைப் போன்று அதிர்ஷ்டத்தை தேடித் தரக்கூடிய மற்றும் லட்சுமி கடாட்சத்தை தரக்கூடிய இந்த மூன்று படங்களையும் உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டால், பணவரவு என்பது கண்டிப்பாக உங்களது வீடு தேடி வரும்.
1. நீர்வீழ்ச்சி:
இந்த நீர்வீழ்ச்சி புகைப்படத்தை உங்கள் வீட்டில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் மாட்டிக் கொள்ளலாம். காலை எழுந்ததும் இந்த பாசிட்டிவ் எனர்ஜியை தரக்கூடிய படத்தை பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
இந்த நீர்வீழ்ச்சி புகைப்படம், நிதி தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து தரும். இதனால் பணத்தட்டுப்பாடு என்ற பிரச்சனை குடும்பத்தில் ஏற்படாது. நிதி சம்பந்தமான பிரச்சனைகள் மட்டும் அன்றி இந்த மாதிரியான வாஸ்து படங்களை வீட்டில் வைப்பதன் மூலம் அனைத்து தடைகளும் நீங்கி குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
2. சூரிய உதயம்:
இந்த படத்தை வீட்டின் கிழக்குப் பக்கத்தில் மாட்ட வேண்டும். இந்த படத்தில் சூரியன் எவ்வாறு உதயம் ஆகின்றதோ அதேபோன்று குடும்பமும் உதயமாக தொடங்கும். உங்களது முன்னேற்றத்திற்கு தேவையான வாய்ப்புகளை தேடித் தரக்கூடிய ஒரு வாஸ்து படமாகவும் இது திகழ்கிறது.
இந்த வாஸ்து படத்தை தினமும் நீங்கள் கண் விழித்ததும் பார்க்கும் பொழுது ஒவ்வொரு நாளும் புதிய உதயமாக தோன்றும். அதாவது ஒவ்வொரு நாளும் உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
3. ஏழு வெள்ளை குதிரை:
இது அனைவருக்கும் தெரிந்த மற்றும் மிகுந்த பலன்களை தரக்கூடிய ஒரு வாஸ்து படம். இந்த படத்தை தெற்கு அல்லது வடக்கு திசையில் மாட்ட வேண்டும். ஏழு வெள்ளைக் குதிரைகளும் ஒரே திசையில் ஓடுவது போன்ற புகைப்படத்தை தான் வாங்க வேண்டும். வெவ்வேறு திசையில் ஓடக்கூடிய குதிரை படத்தை வாங்கக்கூடாது.
இந்த படத்தை நாம் காலையில் கண்விழித்ததும் பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். அந்தப் புத்துணர்ச்சியை நமக்கு கொடுக்கக் கூடியது இந்த வாஸ்து படங்கள் தான். இந்த ஏழு குதிரைகளும் எவ்வாறு வேகமாக ஓடுகின்றதோ, அதனைப் போன்று நம்மளும் வாழ்க்கையில் அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி ஓடிக் கொண்டே இருப்போம்.
இந்த மூன்று வாஸ்து படங்களையும் சரியான திசையில் மாட்டி வைத்து, தினமும் இந்த படங்களை நாம் பார்க்கும் பொழுது நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மேலும் பண வரவு என்பது கண்டிப்பாக ஏற்படும். இதில் இந்த படங்களுக்கு ஏற்ற திசை என்பது தான் மிகவும் முக்கியம். சரியான திசையில் இந்த படங்களை மாட்டி வைத்தால் மட்டுமே, அந்த படத்திற்கு உரிய பலன் நமக்கு கிடைக்கும்.