இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பிறப்பில் இருந்தே சனி பகவானின் தாக்கத்தை பெற்றவர்களாக விளங்குவார்கள். ஒரு நபர் 8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தால், அவரது மூல எண் 8 ஆகும். அப்படிப்பட்டவர்களுக்கு சனியின் அருளால் திடீர் பண ஆதாயமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆக உள்ளது.
8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு மறுப்பிறவி கிடையாது என்று கூறப்படுகிறது.காரணம், இவர்கள் தங்களது ஒரே பிறவியில் அனைத்து வகையான நன்மை, தீமைகளையும் பார்த்து விடுவார்கள். இது அவர்களுக்கே தெரியாத ஓர் இரகசியமாகும்.
ஒவ்வொரு இலக்கத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும்.
அந்தவகையில் இந்த 8 , 17 , 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சில குணாதிசயம் இருக்கும்.
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைக்கு வேறு ஒருவர் தான் காரணமாக இருப்பார்கள்.ஆனால் இந்த எண்ணில் பிறந்தவர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைக்கு, இவர்கள் மூலக்காரணமாகவே இருப்பார்கள்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 8 என்ற எண்ணின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், சனி பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் அவர்கள் மீது இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், தங்கள் கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும், சனி பகவானால் பெரியளவு பாதிப்பு வராது என்றும் கூறப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரேடிக்ஸ் எண் 8இல் பிறந்தவர்களுக்கு சனி ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். இவர்கள் அதிகமான தன்னம்பிக்கையை கொண்டிருப்பார்கள். அத்துடன் எண்ணங்களை யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதே போன்று அவர்களிடம் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருக்கும். இதனால் அவர்களின் இலக்குகளை கூடிய சீக்கிரம் அடைந்து விடுவார்கள்.
12 மாதங்களில் எந்த மாதத்திலும் 17 ஆம் தேதி பிறந்தவர்களின் கூட்டெண் 8 ஆக இருக்கும். இவர்கள் அதிகமாக வெளி பயணங்களை விரும்புவர்களாக இருப்பார்கள். எப்போதும் தெளிவான எண்ணங்கள் இவர்களிடம் பார்க்கலாம். எந்த செயல் செய்தாலும் அதில் நிதானம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
26 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு பொறுமை மிகவும் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் இவர்கள் சார்பாக இருப்பதால் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பார்கள். எப்போதும் பயனற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பமாட்டார்கள். பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க விரும்ப மாட்டார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் வரை போராடுவார்கள்.
பிற தேதிகளில் பிறந்தவர்களுடன் ஒப்பிடும் பொழுது 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, சனி பகவானால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாது. இவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சனிபகவானால் அதிர்ஷ்டம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.