குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்..!!

Photo of author

By Janani

குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்..!!

Janani

இறைவனையும், இறை சக்தியையும் ஜோதி ரூபத்தில் மட்டுமே நம்மால் காண முடியும். இறைவன் ஜோதி வடிவமானவன். நாம் ஏற்றி வைக்கும் விளக்கு தான் நாம் வழிபடக்கூடிய தெய்வம். கோவிலுக்கு சென்றால் கூட இறைவனுக்கு ஆரத்தி காண்பித்து, அந்த ஆரத்தியை தான் நாம் முதல் பிரசாதமாக வாங்கிக் கொள்கின்றோம்.

போராட்டமான உங்களுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு ஜோதி வழிபாடு. விளக்கு போட்டு தினமும் இறைவனை வழிபாடு செய்தாலே போதும், உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து விடும். இதனால் உங்களுடைய வீட்டில் ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்துக் கொண்டே இருக்கும்.

தீபத்தின் ஒளியால் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அழிந்து கொண்டே வரும். திருவண்ணாமலை ஈசன், ஐயப்பன், வள்ளலார் ஆகிய அனைவரையும் ஜோதி வடிவில் தான் நம்மால் காண முடியும். இப்படி இறைவன் ஜோதி ரூபத்தில் காட்சி தந்த வரலாறு நம்முடைய ஆன்மீகத்தில் உள்ளது.எவ்வளவு நேரம் உங்கள் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்களது வீடும், வீட்டில் இருப்பவர்களது எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.

உங்களுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது, எந்த திசைக்கு செல்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடி வருகிறீர்கள் என்கின்ற சூழ்நிலையில், உங்களுடைய குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால், இந்த ஒரு தீபத்தை தொடர்ந்து ஏற்றி வந்தாலே நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பூஜை அறையில் பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் அவரவர் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருக்கும். உங்களுடைய குலதெய்வப் படம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால், அந்த குலதெய்வத்திற்கு முன்பு தொடர்ந்து 48 நாள் தீபம் ஏற்ற வேண்டும்.

ஒரு தாம்பூல தட்டில் இரண்டு மா இலைகள் வைத்து அதன் மேலே இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை அழைத்து, குலதெய்வ படத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து வழிபாடு செய்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களது கஷ்டத்தை தீர்த்து வைக்கும்.

நமக்கு பெரிய கஷ்டம் வந்துவிட்டது என்றால் அதற்கு முதல் காரணம் நமது குலதெய்வம் நமக்கு துணையாக இல்லை என்பதுதான். அந்த குல தெய்வத்தை உங்கள் வாழ்க்கைக்கு துணையாக வரவைக்க, மேலே சொன்ன முறையில் அழைத்தாலே போதும், குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும்.

பெரிய பெரிய துன்பங்கள் கூட இந்த 48 நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். 48 நாட்கள் தொடர்ந்து உங்களது வீட்டில் இந்த தீபத்தை ஏற்றினால், நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில் உங்கள் வீட்டு கஷ்டங்கள் அனைத்தும் பஸ்பம் ஆகிவிடும். இதுதான் நம்பிக்கை.

வீட்டில் இருக்கும் பெண்களால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற முடியாது. இடையில் மாதவிடாய் நாட்கள் வரும். அப்போதும் நீங்கள் வழிபாட்டை நிறுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் வேறு ஒருவரை பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொல்ல வேண்டும்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த மா இலை வாடிய பிறகு, வேறு ஒரு புதிய மா இலையை வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இல்லை என்றாலும், பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றி குலதெய்வத்தை அழைக்கலாம், தவறு கிடையாது.

மிகுந்த கஷ்டத்தில் இருப்பவர்கள், இந்த தீப வழிபாட்டை முயற்சி செய்து பாருங்கள். விளக்கை ஒரு நாள் மட்டும் ஏற்றி வைத்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் தான் முழுமையான பலன்களும் கிடைக்கும்.