RR அணி வாங்கிய 13 வயது சிறுவன்.. துபாயில் ஆடிய அதிரடி ஆட்டம்!! விமர்சனத்துக்கு வைத்த முற்றுப்புள்ளி!!

0
381
A 13-year-old boy bought by the RR team

cricket: இந்திய அணியின் ஆசிய கோப்பை தொடரில் RR அணி வாங்கிய வீரர் சூரியவன்ஷி அதிரடி ஆட்டம்

நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான பாணியில் அணிகளை வலிமையுடன் கட்டமைத்தனர். இந்நிலையில் RR அணி வைபவ் சூரியவன்ஷி என்கிற 13 வயது வீரரை ரூ.1.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியது. இதை சிலர் விமர்சனமும் செய்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியுள்ளார் சூரியவன்ஷி.

அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் உடன் மோதியது ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.  இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது இந்திய அணி.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய யு எ இ அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியான ஆட்டத்தை  வெளிப்படுத்தினார்.

46 பந்துகளை எதிர்கொண்ட இவர் 76 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடித்தார். இதன் வழியாக ஐ பி எல் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவருடன் களமிறங்கிய ஆயுஷ்  மத்ரே 51 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்தார். 16.1 ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் முன்னேறியது.