இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டியானது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அணியுடன் இணைந்து இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முதல் போட்டியில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கினார்.
இந்த இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா,சுப்மன் கில் மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தான் ஆனால் இதில் கே எல் ராகுல் மூன்று,ஆறு என அனைத்து வரிசையிலும் விளையாடிய அனுபவம் உள்ளது. இருந்தாலும் தற்போது நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை 200 ரன்கள் அடித்து சாதனை படைத்தது.
இதனால் இவரை மாற்றுவார்களா என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இதுபோன்ற சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க இணையை எந்த அணி நிர்வாகமும் மாற்றி அமைக்க தயங்கும் ஆனால் இந்திய அணி எந்த வரிசையில் யாரை களமிறக்கும் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.