இந்திய அணி தற்போது ஆச்ற்ற்ளியவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு மங்கி கொண்டு வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கு முன் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து உடன் மூன்று போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளிகளை இழந்தது.
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இதுவரை நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆனை தவிர்க்க ஆகாஷ் தீப் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் நாளை சிட்னியில் நடைபெற உள்ள 5 வது போட்டிக்கு முன் பயிற்சி மேற்கொண்டதில் ஆகாஷ் தீப் க்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் நாளை போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் அடுத்து எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரில் ஒருவர்தான் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு வருகிறது. இந்திய அணி இந்த 5 வது போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமான ஒன்று.