Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!!

A bull on foot pilgrimage!! Look at what Annamalai did!!

A bull on foot pilgrimage!! Look at what Annamalai did!!

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!!

மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை சென்றுள்ளார்.

இந்த பாத யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28  ஆம் தேதி அன்று மத்திய மந்திரி அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 168  நாட்களை கொண்ட இந்த பாத யாத்திரையில் பிரதமர் மோடியின் மக்கள் சேவைகளை பற்றி அண்ணாமலை மக்களிடையே கூற இருக்கிறார்.

மேலும், அவரின் சேவைகளை புத்தகமாக தொகுத்து மக்கள் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட இந்த பாத யாத்திரை இன்று மதுரையில் உள்ள மேலூரில் நடைபெற்றது. மதுரையில் பொது மக்களை சந்தித்து பேசுவதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மாலை அணிவித்து மேளம் கொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இவரை வரவேற்க காளை ஒன்றை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தின் காரணமாக அக்காளை திமிறி விட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காளையை அடக்க சிலர் முயன்றும் எதுவுமே முடியவில்லை. எனவே, பயத்தில் அங்கு இருந்த பாஜக நிர்வாகிகள் ஓடி விட்டனர். ஆனால் அண்ணாமலை மற்றும் சில நபர்கள் அந்த காளையை அடக்கினர்.

பிறகு அண்ணாமலை காளையின் நெற்றியை தடவினார். இவ்வாறு அண்ணாமலையை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காளை திடீரென திமிறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version