கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
137
Job appointment through interview in charity department!! Important Announcement!!

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

தற்போது கோவில் நிலங்களை சட்ட விரோதமாக அனைவரும் விற்று வருகின்றனர். இதை தடுக்க தினம்தோறும் இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது.

இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள அம்மாயி அம்மாள் என்பவர் அடையாரில் உள்ள தன்னுடைய நிலம் ஒன்றை திருவண்ணாமலை கோவிலுக்கு எழுதி வைத்தார்.

தற்போது அந்த நிலம் சட்ட விரோதமாக வேறு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஒரு மனு அளித்திருந்தேன். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், இதற்காக வாதாடிய வழக்கறிஞர் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலத்தை உடனடியாக மீட்டு மீண்டும் கோவிலின் பயன்பாட்டிற்கு வருமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

எனவே, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, உடனடியாக கோவில் நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறி இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்பதை எதிர்க்கும் விதமாக அனைத்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் சுற்றிக்கையை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி அனைத்து அதிகாரிகளும் இதற்கான நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கூறி உள்ளார்.