திலக் வர்மாவின் நெகிழ்வு பூர்வமான கொண்டாட்டம்! காரணம் என்ன ?

0
92
Tilak Varma

திலக் வர்மாவின் நெகிழ்வு பூர்வமான கொண்டாட்டம்! ஓ காரணம் இது தானா!

ஆசிய கோப்பை விளையாட்டின் அரையிறுதி சுற்றானது தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி அரை இறுதி சுற்றுக்குள் இந்திய அணி நுழைந்தது.

இந்திய அணியானது இந்த ஆசியா கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதற்கு ஒரு முக்கியமான வீரர் காரணம், அவர்தான் திலக் வர்மா .இவரது பௌலிங் மற்றும் பேட்டிங் திறமை இந்த போட்டிகளில் மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் அணி மற்றும் இந்திய அணி மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20வர்களில் வெறும் 96 ரன்கள் மட்டுமே குவித்தது. மேலும் 9 விக்கெட் களையும் இழந்தது.

இரண்டாவதாக களம் இறங்கிய இந்திய அணி வீரர் ஜெய்ஷ்வால் டக் அவுடானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. களத்திலிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ,மற்றம்  அடுத்ததாக களமிறங்கிய திலக் வருமா போட்டியை ரசிக்கத்தக்க வகையில் எடுத்துச் சென்றனர்.

திலக் வருமாவிற்கு போடப்பட்ட மூன்றாவது பந்திலேயே அவர் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்து விட்டார் மேலும் ஒவ்வொரு ஓவர்களிலும் அவர் இரண்டு சிக்ஸர்கள் அல்லது 2போர்கள், என ருத்ரதாண்டவத்தை ஆட தொடங்கி விட்டார்.

திலக் வர்மா 25 பந்திகளிலேயே அரை சதத்தை அடித்து, சாதனை செய்தார். மேலும் அந்த அரை சதத்தை அவர் கொண்டாடிய விதமே இதுவரை எந்த வீரரும் செய்யாத ஒரு நிகழ்வு பூர்வமான தருணமாக அமைந்தது.

அரை சதம் அடித்த திலக் வருமா மைதானத்திலேயே அவரது ஜெர்சியை சற்று தகர்த்து,அவர் இடுப்பில் போடப்பட்டிருந்த அவரது தாயின் டாட்டூவை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தப் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா பேசுகையில் இந்த அரை சதம் கொண்டாட்டமானது எனது தாய்க்கு தான் எனவும், அவருடைய சிறந்த தோழியான சம்யாவிற்கும் அர்ப்பணிக்கிறேன் என நெகிழ்வு பூர்வமாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர், நான் ஆல்ரவுண்டராக தான் விரும்புகின்றேன் அதற்காகத்தான் நான் பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன் எனவும், நான் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக அஸ்வின், மற்றும் ஜடேஜா போன்றவருடனும் பணியாற்றி இருக்கிறேன் என அவரது அனுபவத்தையும் கூறினார்.