கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

0
129
A good news for those going to Krivalam!! Minister Shekhar Babu Announcement!!

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் அனைவரும் கிரிவலம் வருவார்கள்.

மேலும், இங்கு மகா சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தலத்தில் சிவன் நெருப்பு வடிவத்தில் காட்சி தருகிறார்.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றப்படும். பிறகு வீடுகளில் தீபம் ஏற்றுவர். மாலை 6 மணிக்கு கோவிலில் தீபத்தை ஏற்றுவார்கள்.

அந்த தீபத்தை மலையை நோக்கி காட்டுவார்கள். அதன் பிறகு மலை மீது இருக்கும் சிவாச்சாரியார்கள் அந்த விளக்கு எரிவதை பார்த்துவிட்டு மலை மீது தீபம் ஏற்றுவர்.

இவ்வாறு ஏற்றப்படும் இந்த தீபம் மழையாலோ, காற்றாலோ அணையாமல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அப்படியே இருக்கும். அந்த வகையில் அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமி அன்று இருக்கக்கூடிய சிறப்பு தரிசன கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு பொது தரிசனம் நடக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதற்காக சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், திருவண்ணாமலை கோவிலுக்கு அடிப்படை வசதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலத்தை முன்னிட்டு ரயில் போக்குவரத்து போன்ற பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும் கோவிலில் செயல்பட்டு வந்த அன்னதான திட்டத்தை முழு நேரமாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் கீழ், சென்ற ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 50 மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ. 1.23 கோடி வருவாய் வந்தது.

எனவே இந்த மாதம் முதல் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரும் பொது தரிசனம் வழியாக சாமி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.