மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும்,
ஜூன் 14 ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தினம்தோறும் புது புது திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு பாட வேலைகளில் நடைபெறும் என்றும், இந்த புதிய திட்டம் மாணவ, மாணவிகள் அனைவரும் கலை திருவிழாவில் பங்கேற்று தனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஐந்து கலைகளான நடனம், நாட்டுப்புற கலை, இசை, காட்சி கலை, நாடகம், பொம்மலாட்டம் ஆகியவற்றை பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக பள்ளிகளில் பகுதியை நேரம் பணியாற்றக்கூடிய மற்றும் கலை ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே, இந்த கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் வாரத்தில் இரு பாட வேலைகளில் தவறாமல் நடைபெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த புதிய திட்டம் விரைவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும் தலைமை ஆசரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிக்கொணர முடியும் எனவும், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை கூறி உள்ளது.