Cricket: சமீபத்தில் ஓய்வு அறிவித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்து ஓய்வு அறிவித்தார்.
இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார். இதனால் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியின் முடிவில் அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் தான் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய் பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அணில் கும்ப்ளே வுக்கு பிறகு 537 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனையாளராக உள்ளார். இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வை அறிவித்த முதல் வீரர் என்ற ஒரு சரித்திர சாதனை செய்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை இதுதான் அதற்குக் காரணம் என கூறப்படுகிறது.