தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய இந்திய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன். தென்னாப்பிரிக்க மைதானத்தை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளால் நிரப்பிய சஞ்சு சாம்சன். அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசி சாதனை.
சூரியகுமார் தலைமையிலான தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் என்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.முதலில் களம் இறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களால் பறக்கவிட்டார்.
இவர் இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் முதல் இரண்டு போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் 47 பந்துகளில் 111 ரன்கள் அடித்த சதம் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 47 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என 100 ரன்கள் அடித்து தொடர்ச்சியான சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டி20 போட்டியில் அடுத்தடுத்து போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்