ஆஸ்திரேலிய அணி இந்திய அணி சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வந்த மேக்ஸ்வினி நீக்கப்பட்டு இளம் வீரரான கொன்ஸ்டாஸ்சை களமிறக்கியது ஆஸ்திரேலிய அணி மேலும் இவர் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ரா ஓவரில் 19 ரன்கள் அடித்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் மட்டும் 60 ரன்கள் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து 5 வது போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒரு புதிய வீரரை களமிரக்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பேட்டிங்கிலும்,பவுலிங்கிலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனவே அடுத்து நடக்க உள்ள 5 வது போட்டியில் மார்ஷ் க்கு பதிலாக அறிமுக வீரராக பியூ வெப்ஸ்டரை களமிறக்கவுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த 5 வது போட்டியில் வெற்றி யாருக்கு??