இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இதனால் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் உள்ளது.
மேலும் நாளை நடைபெற உள்ள நிலையில் 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி முக்கிய இரு மாற்றங்கள் செய்துள்ளது. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய நாதன் மேக்ஸ் வினி நீக்கப்பட்டு 19 வயது இளம் வீரரான சாம் கொன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறினார். இந்த நான்காவது போட்டியில் ஹேசில்வுட் க்கு பதிலாக ஸ்காட் போலண்ட் இடம்பெற்றுள்ளார். இந்த நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (w), பாட் கம்மின்ஸ் (c), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.