ஏமாற்றிய நம்பிக்கை நாயகன்!! தட்டி தூக்கிய கம்மின்ஸ்..பாக்சிங் டே டெஸ்ட் போட்டி!!

0
84
A man of deceived faith

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 4 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட கே எல் ராகுல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்தது. தற்போது நேற்று தொடங்கியது 4 வது போட்டி.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 311 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்மித் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் சிறந்த பேட்டிங் ஆல் அணிக்கு வெகுவாக ரன் சேர்த்தனர். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கவில்லை. கடைசி இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கினார் ஆனால் இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் களமிறங்கினார். ஆனால் பலன் ஏதுமின்றி 3 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கே எல் ராகுல் நிதானமாக விளையாடி வந்தார்.

இவர் பாக்சிங் டே போட்டியில் தொடர்ந்து சிறந்த பேட்டிங் வெளிப்படுத்தி வந்த காரணத்தால் இந்த போட்டியில் இந்திய அணி இவர் மீது அபார நம்பிக்கை வைத்தது ஆனால் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆனார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.