வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?

0
72
Vande Bharat train service to start on August 6!! Super news released!!

வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது.

அதாவது, சென்னை-கோவை செல்வதற்கு சாதாரண ரயிலில் 8 மணிநேரம் ஆகும் பட்சத்தில், வந்தே பாரத் ரயிலானது 5.30 மணி நேரங்களிலேயே சென்றடைகிறது.

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தெற்கு ரயில்வே மணடலத்தில் மட்டும் மூன்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

சென்னை-மைசூர், சென்னை-கோவை மற்றும் திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய மூன்று பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை- நெல்லை மார்க்கத்திலும் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டம் போடப்பட்டு வருகிறது.

இதற்கான் அறிவிப்பை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்த நிலையில், திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையே உள்ள ரயில் வழித்தடங்களை மேலும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்படி பலப்படுத்தவும்,

இதனால் வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்தை குறைக்கவும், மேலும், ஆகஸ்ட் மாதம் இந்த சென்னை- நெல்லை இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதற்குமான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிக்குள் வந்தே பாரத் ரயிலானது சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும். சாதாரண ரயில்களுக்கு இருக்கின்ற பத்து மணிநேர பயணமானது, வந்தே பாரத் ரயிலினால் எட்டு மணிநேரமாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து காலை ஆறு மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்று, பிறகு மதியம் இரண்டு மணிக்கு சென்னை திரும்பும். அதேப்போல சென்னையில் இருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் திரும்ப நெல்லைக்கு இரவு பதினோரு மணிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வந்தே பாரத் ரயிலானது திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என்று கூறப்பட்டுள்ளது.எனவே, இந்த வந்தே பாரத் ரயிலின் பராமரிப்பு பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.