ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!!
நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. இதில் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஹென்ரிச் கிளாசன் அவர்கள் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 104 ரன்கள் சேர்த்தார்.
அது போல 187 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோஹ்லி அவர்கள் சதம் அடித்து 100 ரன்கள் சேர்த்தார்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இலக்கை நிர்ணயிக்கும் பொழுது ஒரு வீரரும், இலக்கை சேஸ் செய்யும் பொழுது ஒரு வீரரும் சதம் அடித்தது இதுவே முதல் முறையாகும். அதாவது ஒரு போட்டியில் இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.