Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

A new taluk has emerged in Tamil Nadu!! Officially announced by Tamil Nadu Government!!

A new taluk has emerged in Tamil Nadu!! Officially announced by Tamil Nadu Government!!

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019 ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி.

இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் மட்டும் இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தது.இதனை பிரித்த பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதனால் அந்த பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி  மாவட்டத்திற்கு என்றே புதிய தாலுக்கா வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு  தமிழக அரசு இதனை சரி செய்யும் விதமாக புதியா தாலுக்கவை அமைத்துள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வாணபுரம் தலைமை இடமாக வைத்து புதிய தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய தாலுக்கா மக்களுக்கு நிர்வாக ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகின்றது.மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள மக்கள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Exit mobile version