மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!!
சென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் நேர தாமதம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எனவே, சென்னையில் உள்ள தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வரை ஏறும், இறங்கும் இடங்களை அமைத்து முழுவதுமாக பேருந்து மேம்பாலம் அமைத்தால் மட்டுமே இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் எந்த எந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்பதை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை ஆய்வு செய்து இதற்கான பணியையும் செய்து வருகிறது.
எனவே, தற்போது ரூபாய் 131 கோடி செலவில் சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி.நகர் ஒன்றாவது மெயின் ரோட்டிற்கு இடையே உள்ள பகுதியில் புதிய மேம்பாலம் ஒன்றை அமைக்க உள்ளது.
இந்த மேம்பாலமானது ஏற்கனவே உள்ள பழைய மேம்பாலத்தொடு இணைக்க உள்ளது. இந்த புதிய மேம்பாலமானது, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை, மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புது போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் ரோடு என அனைத்து சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பாலத்திற்கான தூண்களை அமைப்பதற்கு இரும்பை கொண்டு அமைக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. எப்போதுமே கான்கிரீட் சிமெண்ட் கொண்டு அமைக்கப்படும் மேம்பாலம் தற்போது முதன் முறையாக இரும்பு தூண்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது.