இனி மின்சாரத்தை அளவிடும் துல்லிய மீட்டர்!! தமிழக அரசின் புதிய திட்டம்!!
தமிழகத்தில் அதிக அளவு மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அதிக அளவில் மின் சாரத்தை தேவைக்கு அதிகாமாக மின் சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் மின்மாற்றி திறனை மேம்படுத்துதல் போன்ற பல காரணங்களால் மின் வெட்டு பிரச்சனையும் ஏற்படுகிறது.
கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த நிலையிலும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இவற்றில் பயன்படுத்த படும் மின் சாரத்தின் அளவு மட்டும் தற்பொழுது வரையிலும் குறையவில்லை.
அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சென்னையில் மட்டும் தினசரி 3000 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்துள்ளது.அதிலும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது 4,300 மெகாவாட்டாக உச்சத்தை எட்டியுள்ளது.
இதேபோன்று தமிழ்நாட்டில் வேறு சில மாவட்டங்களிலும் மின் தேவை அதிகரிக்கிறது. அதிலும் இரவில் அதிக அளவு மின் சாதனத்தை பயன் படுத்துவதால் மின் சாதனங்கள் பழுதடைந்து மின் தடை ஏற்படுகிறது.
மேலும் தமிழக அரசானது பொதுமக்களுக்கு 100 வாட்ஸ் வரை இலவச மின்சாரத்தை வழங்கி வருகின்றது. இதனை போன்று குறைந்த அளவில் மின்சாதனம் பயன்படுத்தும் குடியிருப்புகளிலும் மின்கட்டணம் வசூலிக்க படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற பல புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்து கொண்டே இருப்பதால் தமிழக அரசானது இதனை தடுக்கும் விதமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு துல்லியமாக கணக்கு செய்யப்படுகின்றது.
இந்த ஸ்மார்ட் மீட்டர் ஆனது வருகின்ற 2025 ம் ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளிலும் பொறுத்த தமிழக அரசானது திட்டமிட்டுள்ளது.
இந்த பணி கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இனி வணிக வளாகங்களிலும் இந்த ஸ்மாட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.