ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இந்திய அணியின் தோல்விக்கு பின் பல விமர்சனங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணியின் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுவது இந்திய அணியின் பேட்டிங் தான். முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி சரியான பேட்டிங்கை வெளிப்படுத்துவதில்லை.
இந்திய அணி இதுவரை ஆடிய கடைசி 5 போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது. முழுவதுமான விக்கெட் வீழ்ச்சிகளை சந்தித்துள்ளது. இவ்வாறு இருந்தும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திருந்த வில்லை அவர்களின் முறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதுவரை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் 5 போட்டிகளில் 2 முறை மட்டுமே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஆட்டம் இரண்டாவது இன்னிங்ஸில் தான் முதல் இன்னிங்ஸில் இன்னும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த முதல் இன்னிங்ஸ் தான் இந்திய அணிக்கு சவாலாக இருந்து வருகிறது. 3 வது போட்டியில் என்ன மாற்றம் இந்திய அணி செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.