கிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை !!

0
152

கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் நடத்தியிருந்தாலும், ஒரே பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்ட சாதனையை இன்னும் முறியடிக்க சாதனையாக இருக்கிறது.

கடந்த 1894-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய விக்டோரியா அணி எதிர்கொண்ட முதல் பந்தை தூக்கி அடித்தில் பந்து மைதானத்தின் மரத்தின் கிளைகளில் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து வீரர்கள் ரன் எடுக்க ஓடத் தொடங்கினர். பந்தை இழந்ததாக அறிவிக்குமாறு பந்து வீச்சாளர் அணிகலன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர்கள் கண்ணுக்கு பந்து தெரியாது என்பதனால் நடுவர்கள் அறிவிக்க மறுத்தனர்.

மரத்தினில் சிக்கிய பந்தை எடுக்க மரத்தை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், மரத்தை ஆட்டியம் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு இடையே வீரர்கள் ரன் எடுத்து கொண்டே இருந்தனர்.ஒருவழியாக மரத்திலிருந்த பந்து கீழே விழுந்தது. அதனை பிடிக்க யாராலும் முடியவில்லை.இந்த முதல் பந்தில் அவர்கள் 286 ரன்கள் ஓடி எடுத்தனர்.

இறுதிகட்டமாக விக்டோரியா அணி வெற்றி பெற்றதாக போட்டியில் அறிவிக்கப்பட்டது. இந்த சாதனையானது இன்றும் என்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனையாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகின்றது.