இரண்டாவது சூப்பர் மூன் இன்று வானில் தோன்றும்!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

0
129
A second super moon will appear in the sky today!! Don't miss it guys!!

இரண்டாவது சூப்பர் மூன் இன்று வானில் தோன்றும்!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

நம் அனைவருமே சூப்பர் மூன் என்பதை கேள்விபட்டிருப்போம். அதாவது, முழு நிலவு நன்கு பிகாசமாகவும், நாம் வசிக்கும் பூமிக்கு மிக அருகாமையிலும் இருப்பதையே சூப்பர் மூன் என்று கூறுகிறோம்.

இந்த சூப்பர் மூனானது சந்திரனுடைய சுற்று வட்டப்பாதையில் மிகவும் அருகில் வரும்போது நமக்கு தெரிகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் ஒரு சூப்பர் மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

எனவே, இது இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் ஆகும். இந்த சூப்பர் மூனை இந்தியாவில் இருந்தபடியே அனைவரும் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டிற்கான மூன்றாவது சூப்பர் மூன் வருகின்ற முப்பதாம் தேதி அன்று வானில் தெரிய இருக்கிறது. இந்த சூப்பர் மூனானது, எப்போதுமே தோன்றும் நிலவை விட சுமார் பதினான்கு சதவிகிதம் பெரியதாக காணப்படும்.

மேலும், முப்பது சதவிகிதம் பிரகாசமாகவும் காட்சி அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். மேலும் இதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் இருக்கிறது.

இந்த சூப்பர் மூனை நமது கண்களால் பார்த்து எதாவது வேண்டிக் கொண்டால் அது அப்படியே நடக்கும் என்று ஏராளமானோர் கூறி வருகின்றனர்.எனவே, அனைவரும் தங்களது விருப்பங்களை இதை பார்த்து கூறுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

எனவே, அனைவரும் இந்த சூப்பர் மூனை அனைவரும் இந்தியாவில் இருந்தே படியே கண்டு கழியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அடுத்து வரக்கூடிய மூன்றாவது சூப்பர் மூனையும் பார்ப்பதற்கு தயாராக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.