5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மைதானத்தை கணிக்க முடியாது! ஆடுகளம் குறித்து கூறிய கேப்டன்! 

0
194
A stadium built 5 months ago cannot be predicted! The captain said about the pitch!
5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மைதானத்தை கணிக்க முடியாது! ஆடுகளம் குறித்து கூறிய கேப்டன்!
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஆடுகளம் குறித்து குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.
நேற்று(ஜூன்6) அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 97 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 12.2 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
பும்ரா(3), ஹர்திக் பாண்டியா(3), அர்ஷதீப் சிங்(2), சிராஜ்(1), அக்சர் பட்டேல்(1) ஆகியோர் பந்துவீச்சிலும் ரோஹித் சர்மா(56ரன்கள்), ரிஷப் பந்த்(36ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டனர். ஆட்டநாயகன் விருது சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து வெற்றிக்கான காரணம் குறித்தும் மற்றும் ஆடுகளம் குறித்து ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.
புதிய ஆடுகளம் குறித்து ரோஹித் சர்மா அவர்கள் “என்னுடைய கை இன்னும் வலிக்கின்றது. டாஸ் போடும்பொழுதே இந்த ஆடுகளத்தை கணிக்க முடியாது என்று நான் கூறி இருந்தேன். இந்த ஆடுகளம் 5 மாதங்களுக்கு முன்னர்தான் கட்டியுள்ளார்கள். அதனால் இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். இருப்பினும் விக்கெட் செட்டில் ஆகவில்லை என்று நான் நினைக்கிறேன்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் உதவி செய்கின்றது. அர்ஷதீப் சிங் அவர்களை தவிர டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் எங்களுக்கு இங்கு கை கொடுக்கின்றது. அது இந்த போட்டியில் தெரிந்தது. அர்ஷதீப் சிங் அவர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் எடுத்த முதல் இரண்டு விக்கெட்டுகள் எங்களுடைய ஆட்டத்தின் டோனை செட் செய்தது.
நாங்கள் இந்த தொடரில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஆடுவோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். அணியில் பேலன்ஸ் வேண்டும் என்றுதான் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தோம். நான்கு சுழற்பந்து வீச்சாளர்களில் இரண்டு பேர் ஆல்ரவுண்டர்கள் ஆவார்.
இங்கு இருக்கும் ஆடுகளங்களின் சூழல் வேகப்பந்து வீச்சுக்கு கை கொடுத்தால் வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவோம். டி20 உலகக் கோப்பை தொடரின் பிற்பாதி சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் பும்ரா, பாண்டியா, அர்ஷதீப் சிங், சிராஜ் என நான்கு வேகப் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதே சூழல் நிலவினால் அதற்கு தகுந்த வகையில் நாங்கள் எங்களை தயார்படுத்தி கொள்வோம். மேலும் இந்த ஆடுகளத்தில் சிறிது நேரம் விளையாடினால் தான் எப்படி விளையாடவேண்டும் என்ன ஷாட் அடிக்க வேண்டும் என்பதே தெரிய வரும்” என்று கூறினார்.