cricket: இந்திய அணி நாளை விளையாடவுள்ள 4 வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் ரெட்டி நீக்கப்படுவதாக கூறப்படுவதை எதிர்க்கும் ரசிகர்கள்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ள 4 வது போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த 4 வது போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி நீக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி சமனில் முடிந்துள்ளது. எனவே இனி இந்த தொடரில் இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்த நான்காவது போட்டியில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்வதாக வெளியான தகவலில் நிதிஷ் ரெட்டி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறுவதாக தகவல் வெளியானது.
இதனால் ரசிகர்கள் பலரும் அவர் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஷ்வால் அடுத்து இந்திய அணிக்கு அதிக ரன் அடித்தவர் அவர்தான் அதனால் அடுத்த போட்டியில் கில் நீக்கப்பட வேண்டும் நிதிஷ் விளையாட வேண்டும். நிதிஷ் நீக்கப்படுவது இந்திய அணி எடுத்த முட்டாள் தனமான முடிவு என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.